ETV Bharat / state

தவறு நடந்திருந்தாலும் கல்குவாரி உரிமையாளர்களை மன்னிக்கத் தயார்  - அமைச்சர் துரைமுருகன் - ஆட்சியர் விஷ்ணுவை முறைத்து கொண்ட வீடியோ வைரல்

தவறு நடந்திருந்தாலும் கல்குவாரி உரிமையாளர்களை மன்னிக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தவறு நடந்திருந்தாலும் கல்குவாரி உரிமையாளர்களை மன்னிக்கத் தயார்  - அமைச்சர் துரைமுருகன்
Etv Bharatதப்பு செய்த குவாரி முதலாளிகளை மன்னிப்போம்தப்பு செய்த குவாரி முதலாளிகளை மன்னிப்போம்
author img

By

Published : Sep 3, 2022, 10:48 AM IST

Updated : Sep 4, 2022, 9:56 AM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "திருநெல்வே மாவட்ட கல்குவாரியில் ஏற்பட்ட விபத்து பரிதாபமானது, வருந்தத்தக்கது. அந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கல் குவாரிகளும் மூடப்பட்டன. ஒரு குவாரியில் நடந்த தவறுக்காக அனைத்து குவாரிகளையும் மூடி இருப்பது தவறு. கல்குவாரியின் உரிமையாளர்களை பற்றி நான் கவலைப்படவில்லை. அங்குள்ள தொழிலாளர்கள் நிலைமையை நினைத்தே பரிதாபம் அடைகிறேன். கல்குவாரி உரிமையாளர்கள் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு குறைந்த அபராதம் விதித்து சுமுகமாக முடிக்க தயாராக இருந்தோம். ஆனால் அவர்கள் என்னைச் சந்திக்காமல் நீதிமன்றத்திற்கு சென்று விட்டார்கள். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்கு அடைந்துள்ளனர்.

திறந்த மனதுடன் உரிமையாளர்களை மன்னிக்க தயாராக இருக்கிறேன். இதற்கு ஒரு சுமூக முடிவு எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். திருநெல்வேலியில் பல கல்குவாரிகள் சட்டவிரோதமாக கனிம வளங்களை கேரளாவுக்கு விற்று வந்தது. இதுகுறித்து எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில், நான்கு தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு பிறகு அனைத்து குவாரிகளிலும் ஆய்வு செய்தனர். அப்படி சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரி உரிமையாளர்களை மூத்த அமைச்சரான துரைமுருகன் மன்னிப்பதாக தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தவறு நடந்திருந்தாலும் கல்குவாரி உரிமையாளர்களை மன்னிக்கத் தயார் - அமைச்சர் துரைமுருகன்

இதையும் படிங்க:“எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி படமும் இருக்கும்”

Last Updated : Sep 4, 2022, 9:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.