ETV Bharat / state

விவசாயி வெட்டி கொலை - உடலை வாங்க மறுத்த ஊர்மக்கள் - போராட்டம்

சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில அவரது உடலலை வாங்க மறுத்து ஊர்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட விவசாயி உடலை வாங்க மறுத்து ஊர்மக்கள் போராட்டம்

author img

By

Published : Nov 11, 2022, 11:06 PM IST

திருநெல்வேலி: சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி மாயாண்டி சீவலப்பேரி நேற்று (நவ.10) பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அபோது, அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டது.

மாயாண்டி கொலை சம்பவத்தை கண்டித்து அவரது உறவினர்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதற்கிடையில் தமிழ்நாடு யாதவ் மகா சபையின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் பொட்டல் துரை தலைமையில் மாயாண்டி குடும்பத்தினரும் உறவினர்களும் அரசு மருத்துவமனை பிணவறை முன்பு கூடினர்.

அவர்களுடன் நெல்லை மாநகர மேற்கு காவல் துணை துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது உடன்பாடு ஏற்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே சீவலப்பேரியில் மாயாண்டியின் உறவினரான கோயில் பூசாரி சிதம்பரம் படுகொலை செய்யப்பட்டார். அப்போது உடலை வாங்க மறுத்து நாங்கள் போராட்டம் நடத்திய போது உடலை வாங்கினால் உடனடியாக அவரது குடும்பத்திற்கு அரசு வேலையும் நிவாரண உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.

ஆனால் இதுவரை அதற்கான உத்தரவை பிறப்பிக்காததை கண்டித்தும், மாயாண்டியை கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உடலை வாங்கப் போவதில்லை என அறிவித்தனர். இது குறித்து தமிழ்நாடு யாதவ மகாசபையின் இளைஞரணி பொதுச் செயலாளர் பொட்டல் துரை கூறும்போது, இந்த கொலை சம்பவங்களில் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து சீவலப்பேரி பகுதியில் படுகொலை நடைபெற்று வருகிறது. அங்கு உளவுத்துறை என்ன செய்கிறது என்பது தான் தெரியவில்லை.

விவசாயி வெட்டி கொலை

தமிழ்நாட்டில் தங்களை தாங்களே பாதுகாக்க கூடிய சூழ்நிலைதான் இருக்கிறது. தமிழக முதலமைச்சருக்கு எங்கள் சமுதாய மக்களை பற்றி கவலை இல்லையா நாங்கள் ஓட்டு போட்டதால் தான் அவர் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார். ஆகவே நாங்கள் மாயாண்டி உடலை வாங்கப் போவதில்லை, காவல் துறை வேண்டுமானால் அந்த உடலை அடக்கம் செய்து கொள்ளலாம் எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மூன்று நாள்களுக்குப் பிறகு பாளையங்கோட்டை அழகுமுத்துக்கோன் சிலை முன்பு ஒரு லட்சம் யாதவர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சி - நெல்லை இஸ்ரோவின் சோதனை வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.