திருநெல்வேலி: திசையன்விளை அருகே தாமரை மொழி கிராமத்தை சேர்ந்தவர் செல்வமதன். இவர் அங்குள்ள ஒரு துணிக்கடைக்கு சென்று, ட்ரையல் ரூமில் ஒவ்வொரு துணியாக மாற்றுவதுபோல் திருடியுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் அவர் அணிந்திருந்த ஆடைக்கு உள்ளே பல துணிகளை சுருட்டி வைத்துள்ளார்.
இதனை சிசிடிவி கேமராவில் பார்த்த கடை ஊழியர்கள் அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்தனர்.
தொடர்ந்து அவர் திருடிய அனைத்து துணிகளையும் வாங்கியுள்ளனர். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என தெரிகிறது.
இதையும் படிங்க: கரை ஒதுங்கிய உடல்: பட்டதாரி இளைஞர் மரணத்தில் திருப்பம்