திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தைச் சேர்ந்தவர், தங்கப்பாண்டி. இவருக்கு பட்டா மாறுதல் செய்ய பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள பாளையஞ்செட்டிகுளம் கிராமத்திற்குப் பாத்தியப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியிடம் மனு செய்திருந்தார்.
அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் தங்கப்பாண்டியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தங்கப்பாண்டி, திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரைத் தொடர்ந்து போலீசாரின் வழிகாட்டுதல்படி சமாதானபுரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தங்கப்பாண்டி சென்றார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தங்கப்பாண்டியன், விஏஓ சுப்பிரமணியனுக்கு 8 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கும்போது கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியத்திடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: TN Pongal Gift: நாளை முதல் டோக்கன் விநியோகம்!