ETV Bharat / state

சட்ட மசோதாவை கிழித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!

author img

By

Published : Jun 5, 2021, 10:33 PM IST

திருநெல்வெலி: மேலப்பாளையத்தில் வேளாண் சட்ட மசோதாவை கிழித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்ட மசோதாவை கிழித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!
சிபிஎம் மாவட்ட செயலாளர் பாஸ்கரன்

நெல்லை மேலப்பாளையத்தில் வேளாண் சட்ட மசோதாவை கிழித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட சிபிஎம் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் செய்தியார்களை சந்தித்து கூறுகையில் ’’பாரதிய ஜனதா அரசாங்கத்தின் விவசாயிகளுக்கு எதிரான, தேசதிற்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி அவசர சட்டமாக கொண்டு வந்தார்கள்.

அந்த நாளை இந்த தேசம் தழுவிய எதிர்ப்பு நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும். விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்தன் அடிப்படையில் இன்றைக்கு நாடு முழுக்க இந்த நகல் எரிக்கும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசாங்கம் தொடர்ந்து ஆறு மாத காலமாக லட்சக்கணக்கில் டெல்லி மாநகரில் கூடியிருக்க கூடிய விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறார்கள்.

இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு எதிர்க்கட்சிகள் எல்லாம் இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக வேகமாகச் செயல்படுகிற மத்திய அரசாங்கம் கரோனாவை கட்டுப்படுத்தவோ, தடுப்பதற்கு தடுப்பூசி கொடுக்கவோ வேகமான நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். ஆகவே, ஒன்றிய அரசுக்கு எதிரான விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற போராட்டம் தொடரும் என்பதை வலியுறுத்துகிறோம்’’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: களைகட்டும் கட்டிங் முதல் யூடியூப் கள்ளச்சாராய விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.