ETV Bharat / state

சுதந்திர போராட்டத்தில் அறியப்படாத ஆளுமைகளை எடுத்துக் கூறும் கண்காட்சி தொடங்கி வைப்பு

இந்திய சுதந்திர போராட்டத்தில் அறியப்படாத ஆளுமைகளை எடுத்துக் கூறும் விதமாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் சென்னை மண்டல அலுவலகம் சார்பில் மாபெரும் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்.

எல் முருகன் பேச்சு
எல் முருகன் பேச்சு
author img

By

Published : Aug 20, 2022, 6:03 PM IST

திருநெல்வேலி: நாட்டின் 75ஆவது சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மத்திய மக்கள் தொடர்பகம், சென்னை மண்டல அலுவலகம் சார்பில் இந்திய சுதந்திர போராட்டத்தில் அறியப்படாத ஆளுமைகளை எடுத்துக் கூறும் விதமாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அருண்ஸ் மஹாலில் 10 நாள்கள் கண்காட்சி இன்று (ஆக.20) தொடங்கப்பட்டது.

இந்த கண்காட்சியை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டும் இதுவரை அறியப்படாத ஆளுமைகளின் வரலாற்றை மக்களுக்கு எடுத்து கூறும் வகையிலான 130 பேரின் புகைப்படங்கள் இடம்பெறுள்ளன.

குறிப்பாக சுதந்திரப் போராட்ட வீரர்களான ஒண்டிவீரன், வஉசி, பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் குறித்த செய்திகளும் இடம் பெற்றுள்ளது. இதைத்தெடர்ந்து தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கடந்த 14ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஸ்வராஜ் என்ற தொடர் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. அதன் பிராந்திய மொழி ஓலிபரப்பையும் அமைச்சர் முருகன் தொடங்கி வைத்தார்.

எல் முருகன் பேச்சு

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திருநெல்வேலி மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மிகப் பெரிய மாவட்டமாக இருந்தது. சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட அதிகமானோர் இந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர். இது மிகப் பெருமையுடையது. 2047ஆம் ஆண்டில் அப்துல்கலாம் கண்ட கனவு நிறைவேற வேண்டும்.

அனைத்தும் அனைவருக்கும் என்ற திட்டம் 100ஆவது சுதந்திர தினத்தில் நிறைவேற வேண்டும். 75ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு 75 சுதந்திர போராட்ட வீரர்களுடைய தொடர் தூர்தர்சனில் 9 பிராந்திய மொழிகளில் 75 வாரம் தொடர்ச்சியா ஒளிபரப்பபட உள்ளது. 75 சுதந்திர போராட்ட வீரர்களில் 3 தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், பூலி தேவன் ஆகியோரது வரலாறு இடம்பெறுகிறது. இளைஞர் சமுதாயம் வேலை தேடும் சமுதாயமாக இல்லாமல் வேலை கொடுக்கும் சமுதாயமாக இருக்கவேண்டும் என்பதே மத்திய அரசின் கனவு. அடுத்த 25 ஆண்டுகளில் வல்லரசு இந்தியாவாக முன்னேறிய நாடாக மாறும். சிறப்பான மனித வளத்தை இந்தியா கொண்டுள்ளது.

மனிதகுல மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டண்ட் அப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக இந்த விழாவில் பேசிய பேசிய திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “எந்த நிகழ்வாக இருந்தாலும் அதனை நினைவு படுத்துவது மிக முக்கியம். 75 ஆவது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தேசத்தின் ஒற்றுமைக்காக அனைவரது வீட்டிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

சுந்திர இந்தியாவின் 75 ஆண்டுகளில் 13 ஆண்டுகள் மட்டுமே நல்லாட்சி நடந்துள்ளது. 5 ஆண்டுகள் வாஜ்பாய் ஆட்சியும் 8 ஆண்டு மோடி ஆட்சியுமே நாட்டுமக்களுக்கான நல்லாட்சி நடந்து வருகிறது” என தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வ.உ.சியின் பேத்தியும் மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பாளருமான ஆறுமுக செல்வியை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இதையும் படிங்க: கட்சி மாறியதால் தகராறு... இருதரப்பு மோதல்... வெடிகுண்டு வீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.