திருநெல்வேலி மாவட்ட சிறப்பு புலனாய்வு குற்றப்பிரிவு காவல் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றும் பாண்டி முத்துலட்சுமி என்பவருக்கு 2021-22ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தென் மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு விருதுநகர் ரயில்வே காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி பின்பு 2016ஆம் ஆண்டு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று அன்றிலிருந்து இன்று வரை நெல்லை மாவட்டத்தில் சிறப்பு புலனாய்வு குற்ற பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மதவாதிகள் குறித்த புலனாய்வு பற்றி கண்காணிக்கும் பணியில் உள்ளார். இதில் அவர் சிறப்பாக பணியாற்றியதற்கும் மத அடிப்படைவாதிகள் பற்றி புலனாய்வு செய்து முன்னெச்சரிக்கையாக மத ரீதியிலான குற்றங்கள் நடைபெறாமல் தடுத்ததற்காக இவருக்கு உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.