திருநெல்வேலி மாவாட்டம் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளும் உடல் நலக்குறைவு காரணமாக (ரத்த புற்று நோய்) மாதமிருமுறை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ரயில்கள், பேருந்துகள் ஓடாததால் செல்வி சிரமப்பட்டுள்ளார்.
குழந்தைகளின் நிலை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின் அலுவலர்களோடு ஆலோசனை நடத்தி குழந்தைகள் சென்னை சென்று சிகிச்சை பெற தனி காரை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் சென்னையில் அவர்களது செலவுக்காக மாவட்ட ஆட்சியர் தனது செந்த செலவில் இருந்து ரூ 20 ஆயிரத்தை வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.