ETV Bharat / state

நெல்லை கன்னிமார் ஓடை வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு - Nellai Kannimar

நெல்லை கன்னிமார் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

நெல்லை கன்னிமார் ஓடை வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழப்பு

author img

By

Published : Oct 24, 2022, 9:54 AM IST

Updated : Oct 24, 2022, 11:06 AM IST

திருநெல்வேலி: கடந்த சில தினங்களாக மேற்குதொடர்ச்சிமலையில் பெய்த கனமழை காரணமாக, நேற்று (அக் 23) மாலை பணகுடி அருகே உள்ள குத்திர பாஞ்சான் அருவி அருகே இருக்கும் கன்னிமார் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இவ்வாறு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலரும் சிக்கினர்.

இதில் பலர் மீட்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் கிராமத்தைச் சார்ந்த நாயகம் மற்றும் நெல்லை பணகுடி தளவாய்புரத்தைச் சார்ந்த இசக்கிமுத்து (42) ஆகியோர் சிக்கி உயிரிழந்தனர். இவர்களில் நாயகத்தின் உடல் இன்று (அக் 24) காலை மீட்கப்பட்ட நிலையில், இசக்கிமுத்துவின் உடலும் பணகுடி அனுமான் நதி கரை ஓரத்தில் மீட்கப்பட்டது.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பணகுடி காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திடீர் காட்டாற்று வெள்ளம்; தண்ணீரில் சிக்கிய 2 பேரின் நிலை என்ன..?

Last Updated : Oct 24, 2022, 11:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.