நெல்லை: பணகுடி யாதவர் தெருவைச் சேர்ந்தவர், ராமன். இவரது மகன் பசுமதி, இவர் கறிக்கடையில் ஆடு வெட்டும் தொழிலை செய்து வருகிறார். இந்த நிலையில் ராமன் மற்றும் அவரது சகோதர குடும்பத்திற்கு இடையே பல ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் வைத்து, சொத்து தகராறு சம்பந்தமாக பிரச்னை முடிக்கப்பட்டு, ஒரு தரப்பினருக்கு ரூபாய் 50 லட்சம் மற்றொரு தரப்பு கொடுக்க வேண்டுமென பேசி முடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று(ஜூன் 07) இரவு ராமனின் மகன் பசுமதி பணகுடி ராமலிங்க சுவாமி கோயில் பகுதியில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பசுமதி, ராமலிங்க சுவாமி கோயிலுக்கு பின்புறம் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் முகத்தில் காயங்களுடன் சடலமாக இறந்துகிடந்தது தெரியவந்தது. இதனை அருகில் இருந்த வீட்டிலுள்ளவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து பணகுடி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீசார் பசுமதி உடலைக்கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் கொலையானது சொத்துத் தகராறுக்காக நடைபெற்றதா அல்லது குடிபோதையில் நடைபெற்றதா என விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ஏற்கெனவே நேற்றிரவு நெல்லை மாவட்டம், களக்காட்டில் மது அருந்துவதால் ஏற்பட்ட தகராறு காரணமாக ஹோட்டல் ஊழியர் பீர் முகைதீன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடைபெற்றதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:நெல்லையில் புகார் கொடுக்க வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!