இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கின்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும்,பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் வழங்குவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் திருநெல்வேலி மாவட்டத்தில் 33 பறக்கும் படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி டவுன் கோட்டையடி பகுதியில் சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய செல்வி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது தனியார் பீடி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை மறித்து சோதனை செய்ததில் முறையான ஆவணங்கள் ஏதுமின்றி 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எடுத்து செல்லப்பட்டது தேர்தல் அலுவலர்களுக்கு தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் முறையான ஆவணங்களை சமர்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவடட் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.