தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ், அரசு காசநோய் கண்டுபிடிப்பு முகாம் நடத்தி காசநோய் அறிகுறி உள்ளவர்களின் இல்லங்களுக்குச் சென்று, நவீன இயந்திரத்தின் மூலம் பரிசோதித்து சிகிச்சை அளிப்பட்டு வருகிறது.
இதன் ஓர் அங்கமாக காசநோயை கண்டறிய நுண்கதிர் எக்ஸ்ரே பொருத்தப்பட்ட வாகனத்தை திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தொடக்கி வைக்கும் விழா நேற்று தென்காசி அரசு மருத்துவமனையிவல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் 14-12-2019 முதல் 18-12-2019 வரை ஐந்து நாட்கள் திருநெல்வேலி, தென்காசியின் பல்வேறு பகுதிகளில் இயங்க உள்ளது. இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு இம்மாதம் 12ஆம் தேதிவரை நடைபெற்ற காசநோய் வாகன முகாமில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மருத்துவக் குழுவினர் சந்தித்து 26 ஆயிரம் பேர்களை சந்தித்து, அதில் 678 பேரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு 34 புதிய காச நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காச நோய்க்கான புதிய மருந்து அறிமுகம்!