ETV Bharat / state

நெருங்கும் தேர்தல்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்குச் சிறப்புப் பயிற்சி - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி: வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

training for election duties in thirunelveli
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி
author img

By

Published : Mar 6, 2021, 2:44 PM IST

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாள்தோறும் அரசு அலுவலர்கள், பறக்கும் படையினர், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாளுவது என்பது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.6) பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சிக்கு திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில், வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். எவ்வாறு வேட்பாளர்கள் பெயர்களை பொருத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்டவை எடுத்துக்கூறப்பட்டன. இதில் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயிரத்து 924 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக முக்கிய ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.