ETV Bharat / state

"ED, NIA மிரட்டல்களுக்கு தமிழக தலைவர்கள் ஒருபோதும் பணியமாட்டார்கள்" - செல்வப்பெருந்தகை பேச்சு! - திமுக அமைச்சர்

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியான துயரத்தின் 24ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை தாமிரபரணி நதிக்கரையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

'ED, NIA போன்ற மிரட்டல்களுக்கு தமிழக தலைவர்கள் ஒருபோதும் பணியமாட்டார்கள்' - செல்வப் பெருந்தகை

author img

By

Published : Jul 23, 2023, 9:06 PM IST

'ED, NIA போன்ற மிரட்டல்களுக்கு தமிழக தலைவர்கள் ஒருபோதும் பணியமாட்டார்கள்' - செல்வப் பெருந்தகை

திருநெல்வேலி: அதிமுக முன்னால் அமைச்சர்களுக்கு ஒரு நியாயம் திமுக அமைச்சர்களுக்கு ஒரு நியாயம் என்பதைப் போல் ஆளுநர் செயல்படுகிறார் என நெல்லையில் தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய போது காவல் துறையினரிடம் ஏற்பட்ட மோதலின் காரணமாக தாமிரபரணி நதியில் 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தின் 24ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை. 23) அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் தாமிரபரணி நதிக்கரையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ செல்வப்பெருந்தகை. "உரிமைக்காக போராடிய போராளிகள் 17 பேருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளோம். தாமிரபரணி நிதியில் உயிர் நீத்த போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு மணிமண்டபம் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நிதிநிலையை கருத்தில் கொண்டு அதற்கான வாய்ப்பு இல்லை என்றால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செலவில் உயர்நீத்த 17 பேருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான ஏற்பாட்டை செய்வோம்.

மணிப்பூரில் உள்ள மக்கள் உரிமைக்காக போராடி வருகின்ற நிலையில் அவர்களின் உரிமையை மீட்டெடுப்பது தான் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் ராகுல் காந்தியின் முக்கிய பணியாக உள்ளது. ஜாதியாக, மதமாக, இனமாக மக்களை பிரித்து ஆளும் பாஜகவிற்கு விடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால் ஒருபோதும் இந்திய மக்கள் ஏமாற மாட்டார்கள்.

வருகின்ற தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள். தீவிரவாதிகள் நாட்டை அச்சுறுத்தும் போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அது தப்பில்லை. அமைச்சர் பொன்முடி மீது 12 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள வழக்கை தோண்டி எடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, விஜயபாஸ்கர் மீது உள்ள வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கேட்டால் அதற்கு ஆளுநர் சிபிஐ விசாரணை நடப்பதாக மறுக்கிறார். இதே நடைமுறைதான் அமைச்சர் பொன்முடிக்கும் பொருந்தும்.

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது பழிவாங்கும் நடவடிக்கை. அமலாக்கத்துறை என்.ஐ.ஏ போன்றவைகள் மூலம் செய்யப்படும் மிரட்டல் உருட்டல்களுக்கு தமிழக தலைவர்கள் ஒருபோதும் பணிய மாட்டார்கள். குறிப்பாக காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள் இதனை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மணிப்பூர் விவகாரம்: சீனா இந்தியாவில் கலவரங்கள் மூட்டுகிறது - ஹெச். ராஜா பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.