தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர், ஜார்கண்ட் மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞர் தபாரெஜ் அன்சாரி கொலைக்கு நியாயம் கோரியும், இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதிகளாக பாவித்து தமிழ்நாடு முழுவதும் சோதனையிடுவதைக் கண்டித்தும் தென்காசி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இக்கொலையில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஜார்கண்டில் கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய வாலிபரின் கொலையில் நியாயமான முறையில் விசாரணை செய்திட கோரிக்கை விடுத்தனர்.