சுந்தர போராட்ட தியாகியும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவருமான இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.
அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் நினைவிடத்தில் கூடுவதால் முன்னெச்சரிக்கையாக கடந்த சில ஆண்டுகளாக இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு நாளை மறுநாள் (செப்டம்பர் 11) நினைவுதினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில், கரோனா 144 தடை அமலில் இருப்பதால் இமானுவேல்சேகரன் நினைவு தினத்திற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் யாரும் செல்ல அனுமதி இல்லை என்று மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து யாரும் செல்ல வேண்டாம். தடை உத்தரவு அமலில் இருப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இமானுவேல் நினைவிடத்திற்கு செல்ல அனுமதி இல்லை: எஸ்பி அறிவுறுத்தல் - திருநெல்வேலி செய்திகள்
திருநெல்வேலி: இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு செல்ல அனுமதி இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.