ETV Bharat / state

மண் மணம் வீசும் மண்பானைகளுக்கு வெளிநாட்டில் அதிகரிக்கும் மவுசு; மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள் - pongal pot sales

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் நெல்லையிலிருந்து 2,000 மண் பானைகள் கடல் கடந்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்
மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்
author img

By

Published : Dec 19, 2022, 3:29 PM IST

மண்பானைகளுக்கு வெளிநாட்டில் அதிகரிக்கும் மவுசு

திருநெல்வேலி: பொதுவாக மண் சார்ந்த பொருட்கள் என்பது தமிழர்களின் பாரம்பரியமாகும். ஆனால், நவ நாகரிகத்தை நாடிச் சென்ற தமிழ் மக்கள் சிலர் காலப்போக்கில் மண்பாண்ட பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர் எனவே கூறலாம். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சமையல் செய்வதில் தொடங்கி பொங்கல் வைப்பது, தண்ணீர் அருந்துவது என அனைத்தும் மண்பாண்ட பொருட்களையே பயன்படுத்தினர்.

ஆனால், தமிழ்நாட்டில் சமீப காலமாக பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகை தினத்தில் மண்பானைகளுக்கு பதில் சில்வர் மற்றும் பித்தளைப் பாத்திரங்களில் தான் பொங்கல் வைக்கின்றனர். இந்தச் சூழலில் நெல்லை மாவட்டத்தில் தயாரிக்கும் மண் பானைகளுக்கு வெளிநாடுகளில் மவுசு கூடி வருவதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்குத் தயாரிக்கப்படும் தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மண்பாண்டம் தயாரிக்கும் பணிகள் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள குளங்களிலும், ஆற்றின் கரையோரத்திலும் கிடைக்கும் தரமான களிமண்களால் செய்யப்படும் இந்த மண்பாண்டப் பொருள்களில் செய்யப்படும் உணவு பதார்த்தங்களுக்கு தனி சுவை இருக்கும்.

5 ஸ்டார் ஹோட்டலில் மண்பானை: இந்தப் மண்பாண்ட பொருள்களுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் என்று மட்டுமல்லாமல் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அதிக மவுசு உள்ளது எனவே கூறலாம். அகல் விளக்குகள், தேநீர் கோப்பைகள், தண்ணீர் பாட்டில்கள், அலங்கார பூச்சட்டிகள், சாம்பிராணி கிண்ணம், பிரியாணி சட்டிகள், சூப் கிண்ணம், பொங்கல் வைப்பதற்கான மண் பானைகள் உள்ளிட்டப் பல்வேறு பொருட்கள் நெல்லையில் செய்யப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் உள்ள பல்வேறு ஐந்து நட்சத்திர(5 Star) ஹோட்டல்களில், பிரியாணி மற்றும் உணவு பதார்த்தங்கள் இது போன்ற மண்பாண்டங்களில் பரிமாறப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதையொட்டி ஆண்டுக்கு 30 கோடி வரை இந்த மண்பாண்டங்கள் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆகிக்கொண்டிருந்தன.

உயர்ந்த பானை ஆர்டர்: ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காலத்தில் வெளிநாடுகளுக்கு எந்த விதப் பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பொங்கல் பானைகள் ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் கிடைத்துள்ளன என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

அதன்படி நெல்லை மேலப்பாளையம் அடுத்த குறிச்சி பகுதியில் உள்ள மண்பாண்டத் தொழில் கூடத்தில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு பொங்கல் பானைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆரம்பத்தில் வெறும் 600 பானைகளே ஆர்டர் கிடைத்த நிலையில், இந்தாண்டு 2,000 பானைகள் கேட்டு ஆர்டர் வந்துள்ளதாக மண்பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முருகன் தெரிவிக்கிறார். மேலும் அவர் கூறுகையில், ”ஒரு பானையின் விலை உள்நாட்டில் 50 ரூபாய்க்கு விற்கபடும் நிலையில், வெளிநாடுகளில் அதிகபட்சம் 180 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

உற்பத்தியாளர்களின் கோரிக்கை: முக்கிய அம்சமாக பானைகளில் தாமரைப் பூ வரைய மதுரையில் இருந்து சிற்ப ஓவியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுடச்சுட தயார் செய்யப்பட்ட பானைகளில் ஓவிய கலைஞர்கள் வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தயார் நிலையில் உள்ள பானைகளை அட்டைப்பெட்டிகளில் வைத்து உடையாத வண்ணம் வைக்கோலை வைத்து ஒட்டப்பட்டு, 2,000 பானைகளும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

குறிப்பிட்ட சில குளங்களில் கிடைக்கும் மணலால் செய்தால் தரமான மண்பாண்டகளைத் தயாரிக்க முடியும். மண்பாண்டம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெறுவதில் சில நடைமுறை சிக்கல் இருக்கிறது. இங்கிருந்து தயாரிக்கப்படும் மண் பாண்டப் பொருட்களுக்கு அதிக மாவுச்சத்து உள்ளது. அரசாங்கம் இதனை ஊக்குவித்தால், திருப்பூருக்கு எப்படி பின்னலாடை பெயர் பெற்றதோ, அதுபோல் மண்பாண்டத்திற்கு திருநெல்வேலி மாவட்டம் சிறப்பு வாய்ந்ததாக அமைவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன.

மண் எடுப்பதற்கான முறையான அனுமதியும், மானியமும் கொடுத்து, பயிற்சி வகுப்பகள் அளிக்கப்பட்டால் தொழிலும் வளரும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இதற்கு அரசும் மாவட்ட நிர்வாகமும் உதவ வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொங்கல் திருநாளுக்கு மண்பாண்டங்களையும் இலசாமாக வழங்க கோரி மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.