ETV Bharat / state

நெல்லை சென்றது ஆக்ஸிஜன் லாரி! - நெல்லையை அடைந்த ஆக்ஸிஜன் லாரி

திருநெல்வேலி: ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 4.820 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சென்றடைந்தது.

நெல்லையை அடைந்த ஆக்ஸிஜன் லாரி
நெல்லையை அடைந்த ஆக்ஸிஜன் லாரி
author img

By

Published : May 13, 2021, 1:19 PM IST

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஆக்ஸிஜன் அதிகளவில் தேவைப்படுகிறது. ஆனால், தேவைக்கேற்ப ஆக்ஸிஜன் இருப்பு இல்லாததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தேவையான அளவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய, மத்திய, மாநில அரசுகள் சார்பில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. வாய்ப்புள்ள தொழிற்சாலைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கவே, துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டது.

நெல்லையை அடைந்த ஆக்ஸிஜன் லாரி

முதல்கட்டமாக, அந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 4.820 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பலத்த பாதுகாப்புடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. பாதுகாப்பாக நெல்லை சென்ற லாரியிலிருந்து, மருத்துவமனை சேமிப்பு கிடங்கில் ஆக்ஸிஜன் சேகரிக்கப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் 900 ஆயிரத்திற்கு மேற்பட்ட படுக்கைகள் உள்ளன.

இங்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி , விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அனுமதிக்கப்படுவதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் நாளொன்றுக்கு 6 டன்னிற்கு குறையாமல் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இத்தேவையை பூர்த்தி செய்ய தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் பகுதிகளில் இருந்து ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டன.

ஆக்ஸிஜன் லாரி
ஆக்ஸிஜன் லாரி

தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்தும் ஆக்ஸிஜன் கொண்டுவரப்படுவதால், பற்றாக்குறை ஓரளவுக்குக் கட்டுக்குள் வரும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:சிங்கப்பூரிலிருந்து 256 காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், கண்டெய்னர்கள் வருகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.