ETV Bharat / state

தூக்கில் தொங்கிய பெண்: கொலையா? தற்கொலையா?  போலீஸ் விசாரணை - திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி: வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது, உடலில் காயங்கள் இருப்பதால் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Murder
tirunelveli Lady murder
author img

By

Published : May 31, 2020, 3:07 PM IST

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள வடகரை பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவரது மகள் ராமலட்சுமி (எ) பாப்பாத்தி (34). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பனுக்கும் திருமணம் நடந்து 12 ஆண்டுகள் ஆகிறது.

இருவரும் செய்துங்கநல்லூரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ராமலட்சுமிக்கும் அவரது கணவருக்கு அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் தகராறு ஏற்படவே கங்கைகொண்டானில் உள்ள தனது தாய்வீட்டிற்கு ராமலட்சுமி சென்றுவிட்டார். அப்போது, அவரின் பாட்டி இறந்துவிட்டதால் சடங்குகள் முடிந்து வீட்டிற்கு செல்லலாம் என முடிவு செய்துள்ளார். எதிர்வீட்டில் வசித்துவரும் அவரது சகோதரர், கணவருடன் அடிக்கடி தகராறு செய்வது குறித்து ராமலட்சுமியை கண்டித்துள்ளார்.

நேற்று தாய் மற்றும் குழந்தைகள் அவரது சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் ராமலட்சுமி மட்டும் இருந்துள்ளார். அப்போது, கதவு திறக்கப்படாமல் இருந்ததையடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ராமலட்சுமி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கங்கைகொண்டான் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த ராமலட்சுமியின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக ராமலட்சுமியின் சகோதரரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமிக்கு கட்டாய திருமணம் - போக்சோ சட்டத்தில் தாய் உள்ளிட்ட 3 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.