ETV Bharat / state

"கமிஷன் பங்கு போட தான் 2 மாவட்டமாக பிரிப்பு" - வைரலாகும் திமுக நிர்வாகி வீடியோ! - சுப்பிரமணியன்

கமிஷனை பங்கு போட மாவட்டத்தை இரண்டாகப் பிரித்திருப்பதாக நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெல்லையும் தென்காசியும் கமிஷனுக்காக பிரிக்கப்பட்டது - வைரலாகும் திமுக நிர்வாகியின் வீடியோ!

author img

By

Published : Mar 16, 2023, 10:38 PM IST

Updated : Mar 17, 2023, 7:02 AM IST

வைரலாகும் நெல்லை திமுக நிர்வாகி சுப்பிரமணியன் வீடியோ

திருநெல்வேலி: நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப்புக்கும், மாநகராட்சி மேயர் சரவணனுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், மாவட்டச் செயலாளர் தூண்டுதலின் பேரில், அவரது ஆதரவு கவுன்சிலர்கள் மேயரை மாற்றக்கோரி போர்க்கொடி தூக்கியுள்ளனர் எனவும், ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெறுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே உட்கட்சிப் பூசல் பூதாகரமாக வெடித்திருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், 15-வது வார்டு கவுன்சிலர் அஜய், “மேயர் சரவணன் தனது அறைக்குள் திமுக நிர்வாகிகளை அழைத்து வைத்து ஒப்பந்ததாரர்களிடம் பேரம் பேசுகிறார்” என்று வெளிப்படையாக, மேயர் மீது குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுபோன்ற சூழலில்தான் மாவட்டச் செயலாளரின் ஆதரவு கவுன்சிலர்கள், மேயருக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அரசு கட்டடப் பணிக்கான ஒப்பந்தத்தை தனக்கு வேண்டிய நிறுவனத்திற்கு ஒதுக்கித் தரும்படி மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப், அமைச்சருக்கு பரிந்துரை செய்து அனுப்பிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே மேயர் விவகாரத்தில் திமுக மீது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு வித அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்டச் செயலாளரின் இந்த கடிதம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மாவட்டச் செயலாளரின் ஆதரவு கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் அரசு ஒப்பந்ததாரரிடம் தனக்கும், மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கும் 18 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்று கேட்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒப்பந்ததாரர் பேசும்போது, “உங்களுக்கு கமிஷன் கொடுத்தால் மாவட்டச் செயலாளரும் கமிஷன் கேட்பார்” என கூறுகிறார். அதற்கு மாநகர செயலாளர் சுப்பிரமணியன், “பாளையங்கோட்டையில் அவர் பார்த்துக் கொள்வார். திருநெல்வேலியில் எனக்குதான் நீங்கள் கமிஷன் தர வேண்டும். 18 சதவீதம் வேண்டும். அது எனக்கும், மாவட்ட அமைச்சருக்கும்” என கூறுகிறார். அமைச்சர் ராஜகண்ணப்பன், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப்புக்கு எதிர் அணியாக செயல்பட்டு வருவதாகவும், குறிப்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய திமுக மாநில வர்த்தக அணி நிர்வாகியுமான மாலை ராஜாவும் சுப்பிரமணியனும் இணைந்து ஒரு அணியாக செயல்பட்டு வருவதாகவும், இது தவிர மேயர் சரவணன் ஒரு சில கவுன்சிலர்களை தன் பக்கம் வைத்துக் கொண்டு, அவர் ஒரு தனி அணியாக செயல்பட்டு வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள் பல்வேறு அணிகளாக செயல்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து திமுக நிர்வாகிகள் ஊழல் புகாரில் சிக்கியுள்ள சம்பவம் அரசியல் விமர்சகர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக, கமிஷனை வசூல் செய்ய மாவட்டத்தையே இரண்டாகப் பிரித்துள்ளதாக மாநகர செயலாளர் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனை ஈடிவி பாரத் செய்திகள் தரப்பில் தொலைபேசியில் பலமுறை அழைத்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையும் படிங்க: கார் கண்ணாடி உடைப்பு விவகாரம் - ''தனி நபரை விட கட்சி தான் முக்கியம் என நினைப்பவன் நான்'' - திருச்சி சிவா பேட்டி

Last Updated : Mar 17, 2023, 7:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.