ETV Bharat / state

"ரோட்டை சுத்தம் செய்யும் எங்களுக்கு அதில் அமர உரிமை இல்லையா?" - நெல்லையில் தூய்மை பணியாளர்கள் ஆதங்கம்! - sanitation workers protest

தூய்மை பணியாளர்களின் தினசரி ஊதியம் ரூ.730 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

tirunelveli-district-sanitation-workers-are-protest-various-demands
"ரோட்டை சுத்தம் செய்யும் எங்களுக்கு அதில் அமர உரிமை இல்லையா?" - நெல்லையில் தூய்மை பணியாளர்கள் ஆதங்கம்!
author img

By

Published : Jul 12, 2023, 8:01 PM IST

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் தூய்மை பணியை தனியாருக்கு விடும் அரசாணை 139 ,152, 10ஐ ரத்து செய்ய வேண்டும், பல வருடங்களாக சுய உதவி குழுக்கள் மூலம் பணிசெய்யும் தொழிலாளர்களை நிரந்தர படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியம் ரூ.730 நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர் முன்னதாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய திமுக அரசை கண்டித்து அனைவரும் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் அனைவரும் வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகில் சாலை நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையில் அமர்ந்த 10 பெண் தூய்மை பணியாளர்களை அங்கிருந்த மகளிர் காவல் துறையினர் கைது செய்து வேனில் ஏற்றுவதற்காக அழைத்தனர். இதனால் கோபமடைந்த தூய்மை பணியாளர்கள் ரோட்டை சுத்தம் செய்யும் எங்களுக்கு கொஞ்ச நேரம் அதில் உட்காரக்கூட உரிமை இல்லையா? என்று ஆதங்கத்தோடு கேள்வி எழுப்பினர். தூய்மைப் பணியாளர்களின் நியாயமான அந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாத காவல்துறையினர் சிறிது நேரம் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த அனுமதி அளித்தனர். இதைனையடுத்து அங்கிருந்த போலீசார் மறியல் போராட்டம் நடத்திய பெண்கள் உட்பட அனைவரையும் கைது செய்து வண்டியில் அழைத்துச் சென்றனர்.

போராட்டம் குறித்து சிஐடியு மாவட்ட தலைவர் மோகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஆட்சிக்கு வந்தால் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்துவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. தனியாரிடம் லட்சக்கணக்கில் கமிஷன் பெறலாம் என்ற நோக்கத்தில் தான் அரசு இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது, இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் இதனால் தமிழ்நாடே நாறும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க :Thanjavur: வண்ண வண்ண பொம்மைகளை வாங்குவதற்கு ஆள் இல்லை; வேதனையில் தொழிலாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.