ETV Bharat / state

Documentary on Kaani tribes: காணி பழங்குடி இனமக்களின் வாழ்வியலை சித்தரித்து ஆவணப்படம்! - திருநெல்வேலியில் வாழும் காணி பழங்குடி இனமக்கள்

Documentary on Kaani tribes: திருநெல்வேலியில் வாழும் காணி பழங்குடி இனமக்களின் வாழ்வியலை சித்தரித்து ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

காணி பழங்குடி இனமக்களின் வாழ்வியலை சித்தரித்து ஆவணப்படம்!

author img

By

Published : Dec 29, 2021, 5:30 PM IST

Documentary on Kaani tribes: திருநெல்வேலி: பொருநை நாகரிகம் உள்பட பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை உள்ளடக்கிய திருநெல்வேலி மாவட்டத்துக்கு மேற்குத் தொடர்ச்சி மலை மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பல்வேறு சிறப்பு வாய்ந்த மூலிகைகள் இருக்கின்றன. அகஸ்தியர் உள்பட பிரபல சித்தர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகள் உள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இனமான காணி பழங்குடி இனமக்கள் ஆண்டாண்டு காலமாக வசித்து வருகின்றனர்.

காணி பழங்குடி இனமக்களின் வாழ்வியலை சித்தரித்து ஆவணப்படம்!

வனப்பகுதியில் மிளகு, கிழங்கு உள்ளிட்ட விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்தும் மலையில் தேன் எடுத்தும், அதை விற்றும் வருமானம் பார்த்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியரின் முயற்சியில் ஆவணப்படம்

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற விஷ்ணு இயற்கை சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் காணி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.

அந்த மக்கள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்களை நகரில் சந்தைப்படுத்த அவர்களுக்கு கடை ஒன்றை அமைத்துக் கொடுத்தார்.

அதுமட்டுமில்லாது அம்மக்களின் வாழ்வியல் குறித்து அனைவரும் அறியும் வகையில் ஆவணப்படம் எடுக்க தனிப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டார். அதற்காக இளைஞர்கள் அடங்கிய ஒரு குழுவை மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அனுப்பி வைத்தார். அந்தக் குழுவினர் கடந்த நான்கு மாதங்களாக அம்மக்களின் வாழ்க்கை குறித்து அறிந்து வீடியோ தொகுப்பு எடுத்தனர்.

இதை ஆவணப்படமாக மாற்றி, அவர்களின் அன்றாட வாழ்க்கைமுறை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார்.

இதையும் படிங்க: Sugar Mill workers strike: ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர்கள் 14ஆவது நாளாகப் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.