திருநெல்வேலி: கேரள மாநிலம் பத்தனம்திட்டா சிரோ மலங்கரா மறைமாவட்ட ஆயர் சாமுவேல் மார் இரோனஸ் (69), மலங்கர மறைமாவட்ட முதன்மை குரு ஷாஜி தாமஸ்(58), உள்ளிட்ட ஆறு பேர் கடந்த ஐந்தாம் தேதி நெல்லை மாவட்டம் பொட்டல் பகுதியிலிருந்து கேரளாவுக்கு ஆற்று மணல் கடத்தியதாக கைது செய்யப்பட்டு, நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 4 பாதிரியார்கள் நாங்குநேரி சிறைச்சாலையிலும், மறைமாவட்ட ஆயர் சாமுவேல் மார் இரோனஸ் மற்றும் பாதிரியார் ஜோஸ் சமகலா ஆகியோர் கடந்த திங்கள்கிழமை முதல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது ஜாமீன் மனு இன்று (பிப் 11) திருநெல்வேலி மாவட்ட ஒன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் உத்தரவிட்டார். இவர்களின் ஜாமின் மனு ஏற்கனவே கடந்த 9ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் புதிய கட்டுமானங்களுக்கு இடைக்காலத் தடை