ETV Bharat / state

பில் கலெக்டர், கிளார்க் பணியிடை நீக்கம்: நெல்லை மாநகராட்சி ஆணையர் அதிரடி! - அதிரடியாக இடமாற்றம்

பணியில் அலட்சியமாக இருந்த பில் கலெக்டர் மற்றும் கிளார்க் இருவரை பணியிடை நீக்கம் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்

பில் கலெக்டர் மற்றும் கிளர்க்கை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் அதிரடி

author img

By

Published : Feb 3, 2023, 12:37 PM IST

நெல்லை: திருநெல்வேலி நகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி அவ்வப்போது மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் திடீரென ஆய்வுக்குச் சென்றார்.

பின்னர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள் குறித்தும், அதன் பராமரிப்பு தன்மை குறித்தும் பார்வையிட்டார். அப்போது பில் கலெக்டர் வேலுச்சாமி மற்றும் கிளார்க் முகமது ரிபாயுதின் ஆகிய இருவரும் பணியில் அலட்சியமாக இருந்தது தெரியவந்துள்ளது.

அதாவது இருவரும் தங்கள் வசம் உள்ள ஆவணங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை விரைந்து முடிக்காமல் கால தாமதம் செய்வதை ஆணையர் கண்டுபிடித்தார். இதையடுத்து உடனடியாக பில் கலெக்டர் வேலுச்சாமி மற்றும் கிளார்க் முகமது ரிபாயுதின் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் பணியில் அலட்சியமாக இருந்த மற்றொரு பில் கலெக்டர் ஒருவரை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார். ஆணையரின் இந்த அதிரடி நடவடிக்கையால் மாநகராட்சி ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: நெல்லை திமுக உள்கட்சி விவகாரம்; மாநகராட்சி அலுவலகத்தில் மோதிக்கொண்டதால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.