திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், பாளையங்கோட்டை, களக்காடு, பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 60 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருநெல்வேலியில் முதன் முதலாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு துபாயிலிருந்து திரும்பிய நபர் ஒருவர் குணமாகி வீடு திரும்பினார். அவரைத் தொடர்ந்து மேலப்பாளையம், பாளையங்கோட்டை, டவுன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை மேலப்பாளையம், பத்தமடை பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் குணமாகி வீடு திரும்பினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் நாங்கள் அனுமதிக்கப்பட்டதிலிருந்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் அனைவரும் எங்களை மிகவும் கண்ணியமாக நடத்தினர்' என்றனர். மேலும் தங்களுக்கு உணவு வழங்கியவர்களுக்கும், வாகன ஏற்பாடு செய்தவர்களுக்கும் அவர் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.
இதையும் படிங்க... சேலத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 7 பேர் குணமாகினர்