ETV Bharat / state

காவலர்கள் அராஜகப் பேச்சு: நெல்லையில் பெண் தீக்குளிக்க முயற்சி - காவலர்களின் அராஜக பேச்சு திருநெல்வேலியில் பெண் தீக்குளிக்க முயற்சி

காவலர்களைக் கண்டித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவலர்களின் அராஜக பேச்சு- திருநெல்வேலியில் பெண் தீக்குளிக்க முயற்சி

author img

By

Published : Jan 31, 2022, 6:21 PM IST

திருநெல்வேலி: சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். கணவர் வெயிலுமுத்து, மகன் சஷ்டி ஆகியோருடன் திருப்பூரில் வசித்துவருகிறார். இவருக்குச் சொந்தமான வீடு ஒன்று சுத்தமல்லியில் உள்ளது. இவர் வீட்டின் அருகில் புதிய வீடு கட்டிய நிலையில் பூர்வீக வீட்டில் ஏற்கனவே இவரது குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் இவரது வீட்டிற்கு வேற்று நபர்கள் குடியிருக்க வரக்கூடாது என்று அருகில் இருக்கும் வீட்டுக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து பேச்சியம்மாள் சுத்தமல்லி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

தரக்குறைவாகப் பேசிய காவலர்கள்

புகார் அளிக்கச் சென்ற அவரை காவல் நிலையத்தில் ஆய்வாளர் தரக்குறைவாக நடத்தியதாகக் கூறி பேச்சியம்மாள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், காவலர்கள் கண் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.

அவரை அருகிலிருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து செய்தியாளரிடம் பேசிய பேச்சியம்மாள்,

காவலர்களின் அராஜகப் பேச்சு - திருநெல்வேலியில் பெண் தீக்குளிக்க முயற்சி

“காவல் துறையின் நடவடிக்கையால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானோம், சுத்தமல்லி காவல் நிலைய தலைமைக் காவலர் ஒருவர் என்னை தரக்குறைவாகவும், கை, கால்களை முறித்து விடுவேன் எனவும் மிரட்டினார்” எனச் சொல்லிக்கொண்டு தனது மூன்று வயது குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சாலை விபத்தில் காயமடைந்தவரை காப்பாற்றிய அமைந்தகரை காவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.