ETV Bharat / state

தேவேந்திர குல வேளாளர் என அரசானை வெளியிட வேண்டும் - ஏழு சமுதாய உட்பிரிவினர் போராட்டம் - Tirunelveli caste news

திருநெல்வேலி: தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஏழு சமுதாய உட்பிரிவுகளை ஒன்று சேர்த்து மாநில அரசு தேவேந்திர குல வேளாளர் என அரசானை வெளியிட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏழு சமுதாய உட்பிரிவினர் போராட்டம்
ஏழு சமுதாய உட்பிரிவினர் போராட்டம்
author img

By

Published : Mar 13, 2020, 4:45 PM IST

Updated : Mar 13, 2020, 11:46 PM IST

தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஏழு சமுதாய உட்பிரிவுகளை ஒன்று சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என மாநில அரசு அரசாணை வெளியிடக் கோரி நீண்ட காலமாக பலவித போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்

அந்த அடிப்படையில் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 100 நாள்களாக கருஞ்சட்டை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருநெல்வேலி சமதானபுரம் அருகே அவர்கள் கிராம வாரியாக தொடர் சங்கிலி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மேலும், ஒரு நாள் ஒரு கிராமம் என்ற அடிப்படையில் 75 நாள்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும், தங்களை மாநில அரசு தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கவில்லை என்றால் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஏழு சமுதாய உட்பிரிவினர் போராட்டம்

இதையும் படிங்க: கல்விக் கட்டணத்தை உயர்த்திய கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

Last Updated : Mar 13, 2020, 11:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.