ETV Bharat / state

காந்தியை கொன்றவர்களை மதிக்கக்கூடாது… சபாநாயகர் அப்பாவு ஆவேசம்

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் காந்தியை கொன்றவர்களை மதிக்கக்கூடாது எனக் கூறினார்

காந்தியை கொன்றவர்களை மதிக்கக்கூடாது
காந்தியை கொன்றவர்களை மதிக்கக்கூடாது
author img

By

Published : Oct 2, 2022, 11:01 PM IST

நெல்லை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டம் நொச்சிகுளத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கிராமத்தின் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கிராம வளர்ச்சி குறித்து அரசு உயர் அலுவலர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்து மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்த தமிழ்நாடு சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு, 'காந்தியை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிராமசபைக்கூட்டம் நடைபெறுகிறது. ஆனால், காந்தியை கொன்றவர்களை மதிக்கக்கூடாது. அவர்களை மதிப்பது வேதனைக்குரியது. அதிமுக 4 அணிகளாக உள்ளது. அதிமுக பிளவால் எந்தப் பிரச்னையும் சட்டப்பேரவையில் வராது.

சட்டப்பேரவைக்கூட்டத்தின்போது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படும். திமுக அரசின் நல்ல திட்டங்களை செயல்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அமைச்சர்கள் சாதாரணமாக பேச்சு வழக்கில் பேசுவது கூட பெரிதாக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்களுக்குப் படிப்பறிவு இல்லை என பாஜக தேசிய தலைவர் நட்டா தெரிவித்திருப்பது வன்மையான வார்த்தை. நீட் தேர்வு வேண்டாம் என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டே ஜே.பி. நட்டா படிப்பறிவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பட்டதாரிகளின் சராசரி 24% என்றால் தமிழ்நாட்டில் 51%ஆக உள்ளது. ஜே.பி. நட்டா தமிழ்நாட்டில் இருப்பவர்களைவிட அதிகம் படித்தவர். ஜே.பி. நட்டா, மதுரை எய்ம்ஸில் 95% பணிகள் முடிவடைந்ததாக கூறுகிறார். அங்கு சிகிச்சை பெற செல்ல முடியுமா. திமுக அரசின் நல்லாட்சியை கொச்சைப்படுத்தும் விதத்தில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள்.

காந்தியை கொன்றவர்களை மதிக்கக்கூடாது… சபாநாயகர் அப்பாவு ஆவேசம்

இது திராவிட பூமி. நீதிக்கட்சி தொடங்கியதில் இருந்து தற்போது வரை அனைத்து மக்களைப் பற்றியும் சிந்திக்கக் கூடிய ஆட்சியை பொறுக்காமல் ஆட்சியை கொச்சைப்படுத்தி வருவார்கள். ஒன்றும் இல்லாத விஷயத்தைப் பெரிது படுத்தாமல், அரசின் திட்டங்களை சிறப்பாக செய்ய ஆலோசனை வழங்குங்கள்’ என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: 91 வயதில் கலகலப்பாக கிராம சபைக்கூட்டத்தை நடத்திய ஊராட்சி மன்றத்தலைவி; நெல்லையில் ருசிகரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.