தூத்துக்குடி சந்திரசேகர நகரில், வீடு கட்டிக் கொடுக்கும் தொழில் செய்து வருபவர் ஜெயப்பிரகாஷ். இவரது வீட்டின் அருகில் குடியிருந்து வருபவர், உபை தாஸ் ரகுமான். இவர்கள் இருவரும் தங்களது மாமனார் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் நேற்று (ஜூன் 13) இவர்களது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக, அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் இருவரும் வீடு திரும்பினர்.
![thoothukudi after got break in 2 houses burglars found nothing](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-03-theft-attempt-house-vis-script-7204870_13062020174012_1306f_1592050212_363.jpg)
![thoothukudi after got break in 2 houses burglars found nothing](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-03-theft-attempt-house-vis-script-7204870_13062020174012_1306f_1592050212_663.jpg)
இதைத்தொடர்ந்து சிப்காட் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் இதுகுறித்து ஆய்வு நடத்தினர். சம்பந்தப்பட்ட இருவரின் வீடுகளிலும் விலை உயர்ந்த பொருள்கள் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட காவல் துறையினர், இதனால்தான் ஆத்திரமடைந்த திருடர்கள் வீட்டில் இருந்த பொருட்களை கலைத்து வீசிவிட்டு சென்றிருக்கக்கூடும் என்பதை உறுதி செய்தனர்.
![thoothukudi after got break in 2 houses burglars found nothing](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-03-theft-attempt-house-vis-script-7204870_13062020174012_1306f_1592050212_935.jpg)
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இளைஞர்கள் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது; கோவை மாநகர காவல் ஆணையர் அதிரடி!