திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இணையவழியில் மாநில அளவில் கண்தான விழிப்புணர்வு கவிதை போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியானது மாணவ - மாணவியர் பிரிவு, பொதுமக்கள் பிரிவு, கவிஞர்களுக்கென மூன்று பிரிவுகளில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநகர காவல் துணை ஆணையாளர் அர்ஜுன் சரவணன் போட்டியாளர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.