திருநெல்வேலி ராதாபுரம் தொகுதி செட்டிக்குளம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், 'அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட கர்ப்பிணிகளுக்கான அம்மா நியூட்ரிசன் கிட் , வெறுமனவே nutrition கிட் என இப்போது அழைக்கப்படுகிறது.
அதில் இடம்பெற்றுள்ள Pro pl health mix எனும் தனியார் நிறுவனப்பொருளுக்கு பதிலாக ஆவின் நிறுவன health mix பயன்படுத்தலாம் என பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை அலுவலர்கள், மாநில அரசின் திட்டக்குழுவினர் மார்ச் மாதம் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் ஏப்ரல் மாதம் அரசின் நிர்பந்தத்தால் அதை நிராகரித்துள்ளனர்.
அப்போது அவர் 2 தனியார் நிறுவனங்களுக்குப் பொருள்களை கொள்முதல் செய்ய அனுமதி அளித்ததன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு 77 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதைத்தாண்டி 450 கோடி ரூபாய் டெண்டர் எடுக்க 100 கோடி ரூபாய் தனியார் நிறுவனம் லஞ்சம் கொடுத்து இருக்கிறது. 100 கோடி ரூபாய் கமிஷனால் 77 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக, பாஜக இடையே எந்தவித குழப்பும் இல்லை. அதிமுக, பாஜகவில் வேறு சில தலைவர்கள் கருத்து சொல்லியிருப்பது அவர்களின் தனிப்பட்ட கருத்து. அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்து ஈபிஎஸ், ஓபிஎஸ் அவர்களின் கருத்து மட்டும் தான்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கெடிலம் ஆற்றில் மூழ்கி இறந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி