மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலியில் தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி நாங்குநேரி சுங்கச்சாவடியை முற்றுகையிடும்போராட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு டோல்கேட்டை நோக்கி முற்றுகையிட சென்றனர்.
அங்கு பாதுகாப்புக்காக நின்ற காவல்துறையினர் பேரிகார்டு அமைத்து அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: 'தொண்டறமே வாழ்வெனக் கொண்டவர் பெருந்தோழர் நல்லகண்ணு'