ETV Bharat / state

நெல்மணிகளை வழங்கி விதைப்புப் பணியை தொடங்கிவைத்த ஆட்சியர் - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

பாரம்பரிய நெல் விதைப்பை ஊக்குவிக்கும்விதமாக 150 உழவர்களுக்கு ஏழு வகையான பாரம்பரிய விதை நெல்மணிகளை வழங்கி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விதைப்புப் பணிகளைத் தொடங்கிவைத்தார்.

V
V
author img

By

Published : Aug 18, 2021, 6:53 AM IST

திருநெல்வேலி: பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திவந்த உணவு, நெல் வகைகளைப் பாதுகாக்கும் வகையில், நமது நெல்லை காப்போம் அமைப்பு சார்பில், தமிழ்நாட்டின் ஏழு மண்டலங்களில் பாரம்பரிய நெல் விதைப்புப் பணிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

அதன்படி பாரம்பரிய நெல் ரகமான மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி உள்ளிட்ட ஏழு நெல் வகைகளைச் சார்ந்த நெல்மணிகளை தலா இரண்டு கிலோ வீதம், சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்க முடிவுசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாரம்பரிய விதை நெல்மணிகள் வழங்கும் விழா, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஆக. 17) நடைபெற்றது.

விவசாயிகளிடம் விதை நெல்மணிகளை வழங்குவது தொடர்பான காணொலி

விவசாயிகளின் ’பலே’ திட்டம்

இதில் ஆட்சியர் விஷ்ணு கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல்மணிகளை வழங்கி விதைப்புப் பணிகளைத் தொடங்கிவைத்தார்.

மாவட்டம் முழுவதும் சுமார் இரண்டு டன் எடையுடைய விதை நெல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், இதன்மூலம் செய்யப்படும் சாகுபடியில், அடுத்த ஆண்டு ஒவ்வொரு ரகத்திற்கும் சுமார் நான்கு கிலோ வரை விதை நெல்மணிகளை, விவசாயிகள் திருப்பி வழங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

விவசாயிகளிடம் விதை நெல்மணிகளை வழங்கிய ஆட்சியர்

பின்னர் திருநெல்வேலி மாவட்டம் கோடக நல்லூரில், வேளாண் துறை சார்பில் பாரம்பரிய நெல் விதைகளைப் பயிர் செய்யும் முறை குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1,15,785 பேர் பயன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.