திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணையின் மதகு திறக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக கதவு உடைந்ததால் அதிகளவில் தண்ணீர் வெளியேறி மண்சரிவு ஏற்பட்டு வயல்வெளிகளில் புகுந்தது. இதனால் விவசாய நிலம் நாசமானது. மேலும், வடகரை செல்லும் சாலையும் முற்றிலுமாக சேதமடைந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பொதுப்பணித் துறை அலுவலர்களால் அணையின் மதகு தற்காலிமாக சரி செய்யப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் பேசுகையில், ’அடவிநயினார் அணையின் மதகு உடைந்ததை தற்காலிகமாக சரி செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதேபோல் மண்சரிவு ஏற்பட்டு சேதமடைந்த சாலையையும் விரைவில் சீரமைத்து கொடுத்தால் போக்குவரத்திற்கும், விவசாயத்திற்கும் பயன்பெறும்’ என்றனர்.