திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள நம்பி நகரைச் சேர்ந்தவர், செல்வ கண்ணன். இவர் மாட்டு வண்டி பந்தய காளை பிரியர். இதனால் தனது வீட்டில் பந்தய காளைகளை வளர்த்து வருகிறார். மேலும் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயங்களில் செல்வ கண்ணன் கலந்துகொள்வார். அவரது காளைகள் போட்டிகளில் வெற்றிப்பெற்று பல்வேறு பரிசுகளையும் வென்றுள்ளது.
இந்த நிலையில் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்குச்சென்ற பந்தயக் காளைகளில் ஒரு காளை மட்டும் வீடு திரும்பவில்லை. செல்வ கண்ணன் இரவு நேரத்திலும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். இருப்பினும், காளை மாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் செல்வகண்ணன் மீண்டும் காட்டுப்பகுதியில் சென்று காளையை தேடியபோது அங்கு முகம் சிதைந்த நிலையில் அந்த காளை உயிருக்கு போராடியது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சேதமடைந்த பந்தய காளை 3 லட்சம் ரூபாய் வரை விலைக்கு கேட்டும் கண்ணன், அதனை விற்க மறுத்து வளர்த்து வந்துள்ளார். இது குறித்து அவர் அளித்தப் புகாரின் பேரில், நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தியதில் மர்மப்பொருள் வெடித்ததில் காளையின் முகம் சிதைந்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தருமபுரி அருகே யானை தாக்கியதில் பெண் படுகாயம்.. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் ஆறுதல்!