நெல்லை: திருநெல்வேலி மாநகரத்தை சேர்ந்தவர் இளம்பெண். இவர் தன்னை ஏர்வாடியைச் சேர்ந்த சாமுவேல்(மதபோதகர்) என்பவர் திருமணம் செய்வதாக கூறிவிட்டு ஏமாற்றியதாகவும், பல பெண்களை சீரழித்து வருவதாகவும் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை இன்று (ஜன.20) அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர், "சாமுவேலும் நானும் பத்து ஆண்டுகளாக நட்பாகப் பழகி வந்தோம் என்னோடு அவர் தனிமையில் இருந்துள்ளார். கணவன் மனைவி போல் வாழ்ந்தோம், திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார். ஆனால், எனக்கே தெரியாமல் சென்னையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதைக்கேட்டால், என்னை மிரட்டுகிறார். பலமுறை என்னை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளார்.
எனது விருப்பத்திற்கு மாறாக பாலியல் சித்திரவதை கொடுத்திருக்கிறார். என்னைத் திருமணம் செய்து கொள்வதாக இரண்டு லட்சம் ரூபாய் என்னிடம் பணம் வாங்கியுள்ளார். இதைக்கேட்டால், அவரது மாமா உடன் சேர்ந்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததோடு, ஒருமையில் பேசி அவமானப்படுத்தியுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த புகார் மனுவில் "ஏராளமான பெண்களை ஆசை வார்த்தைகள் கூறி, மயக்கி படம் பிடித்து அவர்களை மிரட்டி சாமுவேல் நாசம் செய்து வருகிறார். YouTube சேனல் நடத்தித் தன் வசிய பேச்சினால் உதவி செய்வதுபோல், பல அப்பாவிப் பெண்களை தன் வலையில் வீழ்த்தியுள்ளார். என்னைப்போல், இனி யாரும் இவர் வலையில் சிக்கி வாழ்க்கையை இழக்கக்கூடாது. எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுத்து அப்பாவி பெண்களை காப்பாற்ற வேண்டும்"என்று கூறியுள்ளார்.
இவ்வாறு பிரபலமான மதபோதகராக உள்ள இளைஞர் மீது இளம்பெண் ஒருவர் மோசடி புகார் கொடுத்துள்ள சம்பவம் திருநெல்வேலி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காதலிக்காக ஆணாக மாறிய பெண்.. அதே காதலியால் கைவிடப்பட்ட பரிதாபம்!