ETV Bharat / state

கூடங்குளத்தில் மீண்டும் முடங்கியது மின் உற்பத்தி!

author img

By

Published : Oct 8, 2021, 8:10 PM IST

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் பராமரிப்புப் பணிகள் முடிந்து, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கிய சுமார் 40 நாட்களிலேயே மீண்டும் மின் உற்பத்தி முடங்கியது.

கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி
கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி

திருநெல்வெலி: கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகா வாட் மின் திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டு, மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், திருநெல்வெலி மாவட்டம், அபிஷேகப்பட்டியிலுள்ள மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டு தென்மாவட்டங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் முதலாவது அணுஉலையானது கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி பராமரிப்புப்பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 2ஆம் தேதி, பணிகள் முடிந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (அக்.08) முதலாவது அணு உலையில், டர்பனில் ஏற்பட்டத் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

மேலும் இரண்டாவது அணுஉலைத் தொடர்ந்து 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது.

இதையும் படிங்க:ஆர்யன் கானுக்கு பிணை மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.