ETV Bharat / state

நெல்லை நதிநீர் இணைப்பு திட்டத்தை நேரில் ஆய்வு செய்த சபாநாயகர் - thirunelveli

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் நதிநீர் இணைப்பு திட்டப் பணிகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் ஆய்வு செய்தார்.

நெல்லை நதிநீர் இணைப்பு திட்டத்தை நேரில் ஆய்வு செய்த சபாநாயகர்

author img

By

Published : Oct 11, 2022, 10:11 PM IST

திருநெல்வேலி: தாமிரபரணி ஆறு, நம்பியார் கருமேணியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்டம் 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் 369 கோடி நிதியில் தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டம் மந்த கதியில் நடைபெற்ற நிலையில் தற்போது இத்திட்டத்திற்குக் கூடுதலாக 872 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

அடுத்த வருடம் மார்ச் 31ஆம் தேதிக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என நெல்லை வந்த முதலமைச்சர் தெரிவித்திருந்தார், ஆகையால் பணிகளை விரைந்து முடிக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல்லை பொன்னாக்குடி அருகே இத் திட்டத்தின் கீழ் நான்கு வழிச்சாலைக்கு மாற்றுப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் தற்காலிகமாகத் தண்ணீர் செல்லும் வகையில் குழாய்களும் அமைக்கப்பட்டு வரும் பணிகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் ஆட்சியர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பிறகு சபாநாயகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

“நான்கு வழிச்சாலையில் மாற்றுப் பாதை அமைக்கப்பட்டு 1,300 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் 420 குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இந்த மாதம் இறுதியில் நிறைவு பெற்றுவிடும். பொட்டல் விளைப் பகுதியில் இத்திட்டம் தொடர்பாக விவசாயி ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார், அந்த வழக்கு விரைந்து முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

கடந்த ஆட்சியில் இந்த பகுதியில் 6 முதல் 8 சதவிகித பணிகள் தான் நிறையப் பெற்றிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 45 சதவீதம் முடிவு பெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நெல்லை நதிநீர் இணைப்பு திட்டத்தை நேரில் ஆய்வு செய்த சபாநாயகர்

இதையும் படிங்க: விலை இல்லாததால் அவலம் - கொட்டப்பட்ட பூக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.