ETV Bharat / state

”வன்கொடுமை சம்பவங்களில் தமிழக அரசின் நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது” - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி - nellai news

Former IAS Officer Sivakami: வன்கொடுமை சம்பவங்களில் தமிழக அரசின் நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், சமூக சமத்துவ படை கட்சியின் தலைவருமான சிவகாமி தெரிவித்துள்ளார்.

Former IAS Sivakami
முன்னாள் ஐஏஎஸ் சிவகாமி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 2:03 PM IST

Updated : Nov 15, 2023, 2:32 PM IST

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், சமூக சமத்துவ படை கட்சியின் தலைவருமான சிவகாமி பேட்டி

திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக சமத்துவ படை கட்சியின் நிறுவனத் தலைவர் சிவகாமி பேசுகையில், “தென் மாவட்டங்களில் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக இன்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சந்துரு எங்களிடம் கேட்ட அறிக்கையின் அடிப்படையில், நாங்கள் நேரில் வந்து கள ஆய்வு மேற்கொண்டு சந்துரு-க்கு விரைவில் அறிக்கை வழங்க இருக்கிறோம். நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நெல்லை மாவட்டத்தில் அதிக சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக கரிசல்குளம் பகுதியில், சாந்தி என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம், ராதாபுரம் பகுதியில் இசக்கி முத்து என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், மணி மூர்த்தீஸ்வரம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் என அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை, நிம்மதியாக உறங்கவில்லை என கூறுகிறார்கள். தமிழக அரசின் நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது. தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனைக்கு பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து ஒரு லட்சத்து 95 ஆயிரம் பணம் பெறப்பட்டு உள்ளது. தமிழக அரசு நினைத்திருந்தால், சிறப்பு திட்டத்தின் கீழ் இலவச வீடு வழங்கியிருக்கலாம்.

பல கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். போலீசில் உள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர், குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். போலீசாரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் நூறு வழக்குகளில், 93 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். மூன்று வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை வருகிறது. 1989ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்.

தற்போது வரை ஒருவர் கூட அந்த கூட்டத்தை நடத்தவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இலவச மனை நிலம் வழங்க வேண்டும் என சட்டம் உள்ளது. சட்டத்தை முறையாக பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் தொடர்பாக முழுமையான தகவல் தமிழக அரசிடமே இல்லை.

ஆதரவாக அறிக்கை வெளியிட முடியுமா? தற்போது எவ்வளவு உள்ளது, எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது, எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளது என்பது குறித்த விவரங்களை கேட்டு உள்ளார். பாதிக்கப்பட்ட அனைவரையும் நேரில் சென்று விசாரித்து இருக்கிறேன். இது தொடர்பான அறிக்கையை இன்னும் ஒரு வார காலத்தில் சமர்பிக்க இருக்கிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: என்.சங்கரய்யா மறைவு; அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

Last Updated : Nov 15, 2023, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.