நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் சாம்சன். இவர் காவல் ஆய்வாளர் மட்டுமல்ல மிகச்சிறந்த சமூக ஆர்வலர் எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இவர் நேற்று மதியம் வீரவநல்லூர் அருகே உள்ள ரெட்டியார்புரம் என்ற பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில் இருந்த டீக்கடைக்குள் பாம்பு ஒன்று புகுந்துவிட்டது.
பாம்பு வந்ததையடுத்து அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்புக்குள்ளானது. இதனையறிந்த காவல் ஆய்வாளர் சாம்சன், கூட்டத்தில் இருந்த பாம்பை தனது கையில் பிடித்து தோளில் போட்டுக்கொண்டு பாதுகாப்பாக ஒரு இடத்தில் விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. காவல் ஆய்வாளரின் இந்த வீரச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.