நெல்லை:Sexual Harassment: திசையன்விளையில் இருந்து உடன்குடி செல்லும் சாலையில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக கிறிஸ்டோபர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு:
இந்நிலையில் இங்கு பிளஸ் 2 படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் ஸ்பெஷல் வகுப்பு எடுப்பதாகப் பள்ளி தலைமையாசிரியர் கூறியுள்ளார்.
இதையடுத்து சில மாணவிகள் மட்டும் அதில் கலந்து கொண்டுள்ளனர்.அதில் ஒரு மாணவியிடம் தலைமையாசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளி மாணவி பெற்றோரிடம் நடந்ததைத் தெரிவித்துள்ளார். பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் அளித்தப் புகாரின் அடிப்படையில் இன்று காலை பள்ளி நிர்வாகம் தலைமை ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து மாணவி தரப்பில் திசையன்விளை காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் மீது புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் தற்போது காவல் துறையினர் தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், அவரைக் கைது செய்ய முற்பட்டபோது தலைமை ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார் எனத்தெரிகிறது.
இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியரை கைது செய்யும் தேடுதல் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.