ETV Bharat / state

ஜெய் ஸ்ரீராம் சர்ச்சை; தமிழ்நாட்டில் வலுக்கும் எதிர்ப்பு..! - எஸ்.டி.பி.ஐ கட்சி

திருநெல்வேலி: ஜெய் ஸ்ரீராம் என உச்சரிக்க வற்புறுத்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுவன் படுகொலை செய்ப்பட்டதை கண்டித்து, எஸ்டிபிஐ கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் போரட்டம் நடத்தினர்.

எஸ்.டி.பி.ஐ கட்சி
author img

By

Published : Aug 3, 2019, 10:45 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் சண்டாவுளி மாவட்டத்தில் முகமது காலித் அன்சாரி என்ற 15 வயது சிறுவன் 60% தீக்காயங்களுடன் கபீர் சவுரா மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அந்தச் சிறுவன் இறப்பதற்கு முன்னர் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், ‘4 பேர் என்னைக் கடத்திச் சென்று ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்கினர். நான், சொல்ல மறுத்த நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி என்னை கொளுத்திவிட்டனர்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், சிறுவன் உயிரிழந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் போரட்டம்
எஸ்டிபிஐ கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டம்

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுவன் அன்சாரியை எரித்து படுகொலை செய்த கும்பலை கண்டித்தும் அந்த கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எஸ்டிபிஐ கட்சி அறிவித்திருந்தது. இதனையடுத்து சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கபட்டிருந்தனர். மாநில நிர்வாகி சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் வந்த எஸ்டிபிஐ கட்சியினரிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெய் ஸ்ரீராம் - , எஸ்.டி.பி.ஐ கண்டனம்
ஜெய் ஸ்ரீராம் - எஸ்டிபிஐ கண்டனம்

அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்திலும் எஸ்டிபிஜ கட்சியைச் சார்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இப்போரட்டத்தில் ஈடுபட்ட 44 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த மறியல் போராட்டத்திற்கு 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியல் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஜெய் ஸ்ரீராம் சர்ச்சை; தமிழ்நாட்டில் வலுக்கும் எதிர்ப்பு..!

Intro:திண்டுக்கல் 3.8.19

திண்டுக்கல்லில் மத்திய அரசை கண்டித்து இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 44 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Body:உத்திரபிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுவனை ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்திற்காக படுகொலை செய்தனர். சங்பரிவாரின் இந்த செயலை கண்டித்தும் ,
மத்திய அரசு தொடர்ந்து இந்துதுவா கொள்கையை கையாண்டு வருவதை கண்டித்தும், மக்கள் விரோத போக்கினை கண்டுகொள்ளாத மாநில அரசை கண்டித்தும் திண்டுக்கல்லில் எஸ்.டி.பி.ஜ. கட்சியை சார்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதன காரணமாக இரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற 44 பேரை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த மறியல் போராட்டத்திற்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியல் ஈடுபட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.