ETV Bharat / state

பாளையங்கோட்டையில் பள்ளி மாணவிகள் மோதல் - வைரலாகும் வீடியோ - Nellai news today

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் ஆசிரியர்கள் முன்பாகவே பள்ளி மாணவிகள் மோதிக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் ஆசிரியர்கள் முன்பாகவே பள்ளி மாணவிகள் மோதல்!

author img

By

Published : Jul 27, 2022, 12:01 PM IST

திருநெல்வேலி: தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் ஏராளமான கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன. நகர் பகுதிகள் மட்டுமல்லாது, திருநெல்வேலி மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வந்து தங்களது கல்வி நிலையங்களுக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில், நேற்று (ஜூலை 26) பள்ளி முடிந்து மாணவிகள் வீடுகளுக்கு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மாணவிகளிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றும், அதை கண்டுகொள்ளாமல் மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

பாளையங்கோட்டையில் ஆசிரியர்கள் முன்பு பள்ளி மாணவிகள் மோதல் - வைரலாகும் வீடியோ

இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வு குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், பிரதான சாலையில் அரை நிர்வாணமாக மாணவர் ஒருவரை ஓட விட்டு தாக்குதல் தொடுத்த காட்சி வெளியானது.

இந்நிலையில், தற்போது மாணவிகள் ஆசிரியர்கள் முன்பாகவே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் தற்கொலைகள் - குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.