திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில், கோவில்பட்டி பூவனநாதசுவாமி திருக்கோயில் ஆகியவற்றில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடியில் தற்போது நிலவிவரும் கரோனா நோய்த் தொற்று சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டும், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அதிகளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், குலசேகரன்பட்டினம், பூவனநாதசுவாமி ஆகிய திருக்கோயிலில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் திருக்கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.