திருநெல்வேலி: பாளையங்கோட்டை மகாராஜ நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசி அய்யப்பன். திமுக பிரமுகரான அய்யப்பன் தனது ஓட்டுநர் துரையிடம் வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்து வரும்படி கூறி அனுப்பியுள்ளார். இதனையடுத்து, ஓட்டுநர் துரை இரண்டு வங்கிகளுக்கு சென்று மொத்தம் ரூ. 17 லட்சத்தை ரொக்கமாக எடுத்துள்ளார். அந்த பணத்தை காரிலேயே வைத்துவிட்டு, பாளையங்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அருகே உள்ள மற்றொரு தனியார் வங்கியில் மீண்டும் பணம் எடுக்க சென்றுள்ளார்..
முன்னதாக, விட்டுச் சென்றுள்ளார். பின்னர், வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்த போது அவர் காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 17 லட்ச ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து கார் ஓட்டுனர் துரை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருநெல்வேலி மாநகர கிழக்கு காவல் துறை துணை ஆணையர் சீனிவாசன் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதேபோன்று கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் திரட்டப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அருகிலேயே நடைபெற்று இந்த சம்பவம் பாளையங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: CCTV: மூதாட்டியைக் கொன்று 20 சவரன் நகைகள் கொள்ளை - இருவர் கைது!