ETV Bharat / state

ரவுடி என்கவுன்ட்டர்: நான்கு காவல் துறையினருக்கு காயம்; மருத்துவமனையில் சிகிச்சை - ரவுடி என்கவுன்ட்டர்

திருநெல்வேலியில் ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவத்தில் நான்கு காவல் துறையினருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

நான்கு காவல் துறையினர் காயம்
நான்கு காவல் துறையினர் காயம்
author img

By

Published : Mar 16, 2022, 6:16 PM IST

திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவி மேடு பகுதியைச் சேர்ந்தவர், ரவுடி நீராவி முருகன். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு மருத்துவர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை அடித்த வழக்கில், நீராவி முருகனை திண்டுக்கல் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்குத் தகவல்

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே நீராவி முருகன் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் இன்று (மார்ச். 16) காலை தனிப்படையினர் நாங்குநேரியில் இருந்து களக்காடு சாலையில் உள்ள மீனவன்குளம் என்ற இடத்திற்குச் சென்றனர். அங்கு இனோவா காரில் பதுங்கி இருந்த நீராவி முருகனை காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா கைது செய்ய முயன்றார்.

அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட்டம்

அப்போது நீராவி முருகன் தனிப்படையினரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா, நீராவி முருகனை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றார். நீராவி முருகன் அரிவாளால் வெட்டியதில் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா உள்ளிட்ட 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

நான்கு காவல் துறையினர் காயம்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை

அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் சம்பவஇடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டர் தொடர்பாக களக்காடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குத் தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு மேஜிஸ்ட்ரேட் விசாரணையும் நடைபெறும். எஸ்ஐ இசக்கி ராஜா உள்பட நான்கு காவலர்கள் காயமடைந்துள்ளனர். என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நீராவி முருகன் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பெண்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வழிபறிச் சம்பவத்தில் ஈடுபடுவது நீராவி முருகனின் வழக்கம்" என்றார்.

ரவுடி நீராவி முருகனின் உடல் உடற்கூராய்வு

ரவுடி நீராவி முருகனின் உடல் உடற்கூராய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

இதையும் படிங்க: பிரபல ரவுடி 'நீராவி' முருகன் என்கவுன்ட்டர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.