திருநெல்வேலி: புதிய பேருந்து நிலைய பிரதான நெடுஞ்சாலையில் கசாலி என்ற உணவு விடுதி உள்ளது. இந்த உணவு விடுதியில் உணவருந்த வந்த மணிகண்டன், சிவபெருமாள் இருவரும் குவாட்டர் அளவில் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அந்த குவாட்டர் தந்தூரி சிக்கனுக்கு மயோனிஸ் கொடுக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் கடை ஊழியர்கள் ஹாப் அளவு தந்தூரி சிக்கன் வாங்கினால் மட்டுமே அதற்கு மயோனிஸ் தரப்படும் என்று கூறியுள்ளனர். தந்தூரி சிக்கனுக்கு மயோனிஸ் தராத நிலையில் கடை ஊழியர்களுக்கும் உணவருந்த வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் உணவருந்த வந்திருந்த சிவபெருமாள், மணிகண்டன் இருவரும் கடை ஊழியரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து கடை ஊழியர்கள் மற்றும் உணவருந்த வந்தவர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் கையில் கிடைத்தவற்றை கொண்டு தாக்கிக் கொள்ளும் காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நெல்லை அருகே சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி வெட்டி கொலை!