ETV Bharat / state

நெல்லையில் ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்: தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை - தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை

திருநெல்வேலி: 12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல்செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கைத் தாக்கல்செய்துள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

தபால் வாக்குப்பதிவை நேரில் பார்வையிட்ட அலுவலர்கள்

author img

By

Published : Mar 31, 2021, 5:12 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் காவலர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் இன்று (மார்ச் 31) நடைபெற்றது.

இதில் திருநெல்வேலியில் உள்ள ஐந்து தொகுதிகளில் பணிபுரியும் காவலர்களிடம் தொகுதி வாரியாக விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அஞ்சல் வாக்குப்படிவம் வழங்கப்பட்டது. பின்னர் காவலர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

அஞ்சல் வாக்குப்பதிவை நேரில் பார்வையிட்ட அலுவலர்கள்

அப்போது மாவட்டத் தேர்தல் அலுவலர் விஷ்ணு, மாநகர காவல் ஆணையர் அன்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் அஞ்சல் வாக்குப்பதிவை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் மாவட்டத் தேர்தல் அலுவலர் விஷ்ணு தெரிவித்ததாவது, "திருநெல்வேலி மாவட்டத்தில் காவலர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு நான்கு பிரிவுகளில் நடைபெறுகிறது. அதன்படி ஒன்பதாவது பட்டாலியனில் 195 பேர், 12ஆவது பட்டாலியனில் 29 பேர், மாநகர காவல் பிரிவில் 1,033 பேர், மாவட்ட காவல் பிரிவில் 1,894 பேர் என மொத்தம் 2,451 காவலர்கள் வாக்களிக்கின்றனர்.

அதேபோல் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அஞ்சல் வாக்குப்பதிவும் நல்ல முறையில் நடத்தப்பட்டுவருகிறது. கரோனா பாதுகாப்பு குறித்து தேர்தல் ஆணையம் மிக தெளிவான வழிமுறைகளைக் கொடுத்துள்ளது.

வாக்குச்சாவடிகளில் அலுவலர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் வழங்க தயார் நிலையில் உள்ளோம். தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1,300 பேர் வாக்களிக்க இருந்த நிலையில், அதனை 1,050 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா குறித்து இதுவரை அச்சப்பட வேண்டிய சூழல் இல்லை. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 24 மணி நேரமும் கண்காணித்துவருகிறோம். பாளையங்கோட்டை தொகுதியில் சமீபத்தில் ரூ.12.86 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்செய்துள்ளோம். இது குறித்து வருமானவரி அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

நகைகள் பறிமுதல் குறித்து அந்தந்தத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள்தான் முடிவுசெய்வார்கள். போதுமான ஆவணங்கள் இல்லை என்பதால் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக எல்லைப் பாதுகாப்புப் படையினர் வருகை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.