திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள ஆனிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது இளைய மகன் மாதவன் ஜப்பான் நாட்டில் வேலை பார்த்து வந்தார். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மாதவன் உயிரிழந்துவிட்டதாக ஜப்பானில் இருந்து தொடர்புகொண்ட ஒருவர், முத்துச்சாமியிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
ஆகஸ்ட் இரண்டாம் தேதி தனது மகனின் உடலை மீட்டுத்தரக் கோரி முத்துச்சாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், இன்று (செப்.4) மீண்டும் முத்துச்சாமி அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர்கள் மாதவனின் உடலை மீட்காததை கண்டித்து சாலையில் அமைர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் வெளியூர் சென்றிருப்பதால் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாளிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: நிலம் அபகரிப்பு: மூதாட்டி சார்பதிவாளரிடம் புகார் மனு!