திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். அவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, சேர்ந்தமரம் காவல் துறையினர்முருகனை வழிமறித்து விசாரித்துள்ளனர்.
அப்போதுமுருகனுக்கும், காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை முருகன் மர்மமான முறையில் சுரண்டை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறந்து கிடந்துள்ளார்.
பின்னர்காவல் துறையினர் முருகனின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். பின்னர், அவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முருகன் இறப்பு குறித்து அவரது உறவினர்கள் தெரிவிக்கையில், முருகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், காவல் துறையினரின் விசாரணைக்குப் பின்பே இறந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.
மேலும்இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுஉரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.